சுய அறிவு யானை/கேள்விக்காரன்

என் கண்கள்
எத்தனையோ
யானைகள்
கண்டு விட்டன

போர்க்கள பெரிய
முகம் மறைத்த
கவச யானைகள்

மிக நீண்ட தந்தங்கள் பளிச்சென்று வெள்ளியாய்த் துலங்க
நெடும் வனத்தில்
ராஜநடை பயிலும் காட்டு யானைகள்

சின்ன ஸடூலில்
பெரும் பிட்டம்
சிரமபட்டு அமர்த்தும்
வயிற்று அடிமை
கிணற்றுத்தவளை
சர்க்கஸ் யானைகள்

கோவில் வெளி
பிரகாரத்தில்
ரோபோ போல்
தலை துதிக்கை
பெரும் மேனி
ஆட்டிக் கொண்டே
பிச்சை எடுக்கும்
யானைகள்..

இறந்தது மகனல்ல
யானை என்
போர்க்களத்தில்
ஆச்சார்யர் துரோணர்
தீரம் மடைமாற்றம்
செய்ய பயன்பட்ட
பெயர் யானை

எதிரியின்
அடைத்த பெரும்
கோட்டைக் கதவை
மத்தக மலை
கொண்டு
முட்டி மோதி தகர்க்கும்
மூர்க்க யானைகள்

பெரும் வனத்தில்
வெட்டுண்ட
ராட்சஸ மரங்களை
ஓடும் நதி உருட்டும்
பாட்டாளி யானைகள்

மதயானை
மதம் அடங்கும்
கும்கி யானைகள்

இப்படி எத்தனை
எத்தனை யானைகள்
பார்த்திருந்தாலும்
கண்கள் காண
ஏங்கும் ஒரு யானை

பசித்தூண்டல் வெறி பிடிக்காத
பயிர் நிலம் நாசம்
செய்யாத
பாகன் மொழி வேண்டாத
சுய அறிவு யானை.


12/08/2023
இரவு மணி: 10:28