
அன்பால் உலகினை அளப்போம்….
நற்பண்பால் உறவினை வளர்ப்போம்.
குடும்பத்தைக் கோவிலாய் நினைப்போம்…
நல்லெண்ணத்தில் கோபுரம் சமைப்போம்.
நல்லசொற்களை பிறருக்கு அளிப்போம்….
எதிர்மறை எண்ணத்தை அழிப்போம்.
அனைவரும் உறவென மதிப்போம்….
சாதி…மத…வேற்றுமை அறுப்போம்.
இருப்பதைப் பகிர்ந்துண்டு களிப்போம்….
இல்லாதார் உயர்ந்திட உழைப்போம்.
சமத்துவம் தழைத்திட தோள்கொடுப்போம்….
நல்லதமிழால் நற்கவிதைகள்
படைப்போம்.
♦.
