சிறகுகள் அதற்குண்டு …/ரத்னாவெங்கட்

நேரம் பிசகாது
ஜன்னலில் அமர்ந்து
விழிகள் உருட்டி
அலகு தீட்டி
தவறிப் போய்க்கூட
உள் நுழையாது யாசிப்பது
எதையென நினைக்கிறாய்?

வரவேற்று விரிந்தே கிடக்கிற
பெருவெளியும்
சரசரத்து அளவளாவி மகிழ
இலைகள் நிறைந்த கிளைகளுமாய்
புறக்கணிக்காத இயற்கை
காத்திருக்க
புதிதாய் எதை நீ அதற்குத் தர இயலும்?
வீசியெறிகிற
ஒற்றைத் தானியத்துக்கென
உன் புறவாசல் வருவதா அது?

One Comment on “சிறகுகள் அதற்குண்டு …/ரத்னாவெங்கட்”

Comments are closed.