வேடிக்கைப் பார்க்கிறவன்/அழகியசிங்கர்

இந்தத் தெருவை
வேடிக்கைப்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
தினமும்

கடந்த
இரண்டு வாரங்களாய்

காலையில்
மொட்டை மாடியில்
நடைப் பயிற்சி செய்கிறேன்

கண்களால் தெருவை
மேய்ந்து
கொண்டிருக்கிறேன்

தெரு முனையில்
இருக்கும்
கடைக்குக்கூட
நடக்காதே
என்கிறாள் பெண்

நான் நேசிக்கும்
எருமை மாடுகள்கூட
தெருவில் நடக்காமல்
ஒதுங்கி நின்று
வேடிக்கைப் பார்க்கின்றன

எப்போது இந்தத் தெரு
சாதாரண நிலைக்குத் திரும்பும்
என்று சதா என் மனதில்
ஒரு குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது

நம்பிக்கையுடன்
பெண்
அங்கும் இங்கும் செல்கிறாள்

One Comment on “வேடிக்கைப் பார்க்கிறவன்/அழகியசிங்கர்”

Comments are closed.