குருதியின் நிறம்/எஸ் வி வேணுகோபாலன்


கயிறு கட்டி
இறுக்கி வைக்கின்றனர்
சாதீயத்தை

மணிக் கட்டுக் கயிறு
இரத்த நாளங்களை
இறுக்கிக் கொண்டே இருக்க
இன்னும் இறுகிப் போகிறது மனம்
இதயத் துடிப்பும்
படபடப்பும்
ஏறிப் போகிறது பன்மடங்கு

நீ …..நான்
நாங்கள் அவர்கள்….

நூற்றாண்டுகளுக்கு முன் கிழித்த கோட்டின் மீது
படிப்பு ஏறி நசுக்கியும்
அழியாது மின்னுகிறது சாதீயம்

படிப்பு மறுக்கப்பட்ட காலத்தை
மீட்டெடுக்கத் துடிக்கும்
பழமை வெறியர்கள்
பிஞ்சுகளுக்கும் நஞ்சூட்டி
ஏவி விட்டுத்
தருவித்துப்
பூசிக் கொள்கின்றனர்
ஒடுக்கப்பட்ட குழந்தைகள் உடலில் இருந்தும்
பெருகி ஓடும் –
பிரித்து அறிய முடியாத
அதே
செந்நிறக் குருதியை!

One Comment on “குருதியின் நிறம்/எஸ் வி வேணுகோபாலன்”

Comments are closed.