கல்விபெருக்கச்சொன்னால்/கேள்விக்காரன்

என்று தணியும்
இந்த தீரா
குருதி
தாபம்..!

காட்டு
விலங்குகளும்
கைகொட்டி
நகைக்கும்
ஆறாம் அறிவு
பெருமிதம்!

கல்வி
பெருக்கச்
சொன்னால்
குருதி
பெருக்கும்
புது
நாகரீகம்!

இங்கு
நாளும்
வடிக்கப்படும்
பொன் ஆபரணங்கள்
டிசைன்களுக்கு
இணையான
கொலை ஆயுதங்களும்!

சந்தடி
அற்ற
இந்த
சந்தையும்
மந்தமில்லை

வழியும்
பரிதவிப்பு
கண்ணீர்
துடைக்கும்
எட்டு கோடி
ஒன்றிணைந்த
கரங்கள்..

உயிர்த்து
இருக்கும்
மிச்ச மீதி
ஆதரவு
ஆக்சிஜன்.


13/08/2023
காலை மணி: 09:20

3 Comments on “கல்விபெருக்கச்சொன்னால்/கேள்விக்காரன்”

Comments are closed.