கத்தியைத் தீட்டாதே உன் உன் புத்தியைத் தீட்டு…../வேணு.ஜெயராமன்



படிக்க செல்லும் மாணவர்கள்
படிக்கட்டில் தொங்கிய பயணம்…..
நடத்துநர் கேட்க முடியவில்லை
நடமாட முடியாது என மிரட்டல்….

பள்ளியில் ஆசான்கள் நடத்தும்
பாடங்கள் சரியாக கேட்பதில்லை….
பாடம் தவிர மற்றவை எல்லாம்
படிக்கின்றனர் பள்ளியில்….

எங்கோ போகிறது தலைமுறை
எதிர்காலம் என்பது கேள்வியாகி……
என்ன நிலையாகும் செய்திகள்
எவரும் கணிக்க இயலாமல்…..

மெய்ப்பொருள் நாயனாரிடம் கற்ற
தத்தனைப் போல் கத்தியுடன் கல்வி…..
ஒழுக்கங்கள் குறைந்த நிலையில்
ஒற்றுமை வேற்றுமையாகும் மாற்றங்கள்….

பிறப்பதும் இறப்பதும் ஒரு முறை
வேண்டாம் வன்முறை என்றாலும்……
வன்முறைகள் இறக்கை கட்டி
வாலிபங்கள் கொண்டாட்டம் போடுகிறது…..

குடிநீர் பாட்டிலில் சிறுநீர் கழிப்பது
குடும்பங்களை வெட்டி தீர்ப்பது…..
மனிதன் இன்னும் இருக்கின்றானா?
மனித நேயம் மரணிக்கிறது…..

கத்தியைத் தீட்டாதீர்கள் கல்வியில்
புத்தியைத் தீட்டுங்கள் அங்கே …..
கத்தி யார் வெட்டினாலும் வெட்டும்
புத்தி படித்தால் மட்டுமே வரும்…..

அன்புடன்,

9994900507.

One Comment on “கத்தியைத் தீட்டாதே உன் உன் புத்தியைத் தீட்டு…../வேணு.ஜெயராமன்”

Comments are closed.