சுதந்திரம்/ஹரணி

சுதந்திரம்
தன்னை அறிந்து
இயங்கல்..

சுதந்திரம்
தன்னைக் கட்டுக்குள்
வைத்தல்..

சுதந்திரம்
சக மனிதனை
எல்லாம் கடந்து
எப்போதும் நேசித்தல்..

சுதந்திரம்
தேசத்திற்கு ஏதேனும்
தொண்டு செய்தல்..

சுதந்திரம்
உண்மையும்
உழைப்புமாய்
இருத்தல்..

சுதந்திரம்
அற அரசியல்
அமைய வேண்டல்..

சுதந்திரம்
தேசம் தொண்டு சத்தியம்
நம் பிள்ளைக்கு உரைத்தல்..

சுதந்திரம்
நம் எழுத்தில்
சத்தியம் பேசுதல்..

சுதந்திரம்
தன் மானமும்
தமிழ் மானமும் போற்றல்..

பெரிதினும் பெரிதான
சுதந்திரதின
வாழ்த்துகள்…