
கொடி பறக்குது,
நம் நாட்டின் கொடி பறக்குது
மூவண்ணம் மிளிர உயரே
பறக்குதே நம் மணிக் கொடி.
தியாகமும்,பசுமையும்,உடன் சாந்தியும் கிட்டிடவே,
உழைப்பின் சிறப்பு ஓங்கிடவும்
சக்கரம் சுழலுதே.
கோடி கோடி மக்கள் சுதந்திரமாக
வளமுடன் வாழவும்
நீதி தடுமாறாமல்,
அன்பு சிறிதும் நசுங்காமல்,
பாசப் பிணைப்பு கள் சிதறாமல்,
உலகம் போற்ற,
மனித நேயம் ஓங்கவும்
நம் திரு நாட்டு கொடி பறக்குது.
வாழிய பாரத திரு நாடு!. வாழிய!வாழியவே!!
