
சுதந்திரம் என்பது
கடமையையும், பொறுப்புணர்வையும்
காவலாகக் கொண்டது;
நேர்மையும் மனிதநேயமும்
சிறகுகளாக
மனதை மேல் எழும்ப
வைப்பது;
உழவும் நெசவும்
உழைப்பும்
வாழ்க்கையின் அடிநாதமாக
உணர்ந்து தெளிவது;
பிறந்த மண்ணின்
பண்பாடே
மன வலிமைக்கு மருந்தென்று
பின் பற்றுவது;
அவரவர் நல் வழியில்
அவரவர் செம்மாந்து நடக்க
சமூகம் வாழும் என்பதை
சிந்தையில் கொள்வது;
கட்சித் தொண்டர்களோ
நடிகனின் தொண்டர்களோ அல்ல
நாட்டிற்குத் தேவை;
தாய்மண்ணை நேசிப்பவர்களின்
தீரமே தேவை என்பதில்
திட எண்ணம் நிலைப்பது;
சுதந்திரப் போராட்டத்தின்
உண்மை தியாகிகளை
தெய்வங்களாக
மதித்து வணங்குவது;
பெற்ற சுதந்திரத்தைப்
பேணிக் காப்பதே
நற்றவம் என்பதை
நெஞ்சில் நிறுத்துவது!

Arumai
சிவாயநம. மிக்க நன்றியம்மா. 🙏