சுகம் தரும் சுதந்திரம்!/வே.கல்யாணகுமார்..

யுகம் இதோ விழித்தது!
நீரோடையில் துள்ளல்..
புறப்பட்ட நதியின்..
பயணமாய் நம் வாழ்வு!
சிறகுகள் விரிக்கும் சிம்புட் பறவையாய்..
மானுடதேசத்தில் விடுதலைப் பெருவிழா!
கண்விழிக்க கதிர் உதயம்..
நம் வாழ்வுக்கு ஒரு பொன்னான விடியல்!
இதுவே சுகம்.
எழுத்துரிமை..
இனியதை பேசும் உரிமை..
கனிதரும் சுவையாய்..
கற்கண்டின் இனிப்பாய்..
நனிமகிழ்வினை நல்கியது சுகம் தரும் சுதந்திரம்!
காற்றாக எண்ணங்கள்..
ஊற்றாக கவிதைகள்..
மாற்றம் தந்தன..
மானுடக் கனவுகள் மலர்ந்தது..
மண்ணிலே நல்லவண்ணம் வாழும்வழி தெரிந்தது..
புதியதொரு பொழுதாய் புலர்ந்ததுவே..
சுகம் தரும் சுதந்திரம்!
உச்சியில் பறக்கும் கொடியை வணங்கவே..
ஊர்வலம் போகிற பள்ளிக் குழந்தைகள்..
தடம்பார்த்துப் புறப்பட்ட ஏர் உழவர்கள்..
மலை உச்சியில் நிற்கிற இராணுவ வீரர்கள்..
உன்னத கலைஞர்கள்..
ஆடற்கலை..
பாடல் கலை..
அரிதாரம் பூசாத கிராமத்து மகளீர்கள்..
அழகுத் தோரணமாய்..
ஆலமரக்கிளைகளில்..
பூபாளம் இசைக்கும் பூங்குயில்கள்..
பச்சைக்கிளிகள்..
பார் இங்கே விடியும் பொழுதில்..
வந்ததுவே..
சுகம் தரும் சுதந்திரம்!

One Comment on “சுகம் தரும் சுதந்திரம்!/வே.கல்யாணகுமார்..”

Comments are closed.