
சுதந்திரம் எனது பிறப்புரிமை என
முழங்கிய….
லோகமான்ய பால கங்காதர திலகர்
அவர்களை
நினைத்துப் பார்க்கிறேன்……
நீங்கள் எனக்கு இரத்தம் தாருங்கள்
நான் உங்களுக்கு சுதந்திரம்…
தருகிறேன் என்று சொன்ன
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களை
நினைத்துப் பார்க்கிறேன்….
சொத்துக்கள் முழுவதையும் தன்
தாய் நாட்டிற்கு அர்ப்பணித்த
வ.உ.சி. ஐயா அவர்களை
நினைத்துப் பார்க்கிறேன்…..

சிறையில் இருந்து வெளிவந்த
வ.உ.சி. அவர்களை வரவேற்க….
போர்வை மூடி அடையாளம் தெரியாமல்…..
நின்றிருந்த சுப்ரமணிய சிவா
அவர்களை நினைத்துப் பார்க்கிறேன்….
தன் தாயை விட அதிகம் நேசித்த
தாய்நாட்டிற்காக உயிரைத் தந்த
வீரன் பகவத் சிங் அவர்கள்
பண்டிட் ஜவஹர்லால் நேரு….
நினைத்துப் பார்க்கிறேன்….
கொடிகாத்த குமரன் அவர்கள்
தாய் நாட்டிற்கு அறிவை அர்பணித்த
அண்ணல் அம்பேத்கர் அவர்கள்
தேசப்பிதா மகாத்மாகாந்தி அவர்களை நினைத்துப் பார்க்கிறேன்…..
சுதந்திரக் கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது…
ஓசோன் அடங்கிய காற்றையும் புறந்தள்ளி
உங்கள் மூச்சுக் காற்று இன்னும்
வீசுகிறது….
நுகர்கிறோம் நீங்கள் தந்த சுதந்திர
காற்றை….
எண்ணற்ற தியாக செம்மல்களை
எண்ணி எண்ணி மனம் உருகுகிறது….
அனைவரையும் சுதந்திர தின விழாவில் போற்றி மகிழ்கிறேன்……
பாரத தாய் பெற்ற எம் மூத்தோர்களை
இந்நாளில் வந்தே மாதரம் வந்தே மாதரம்…
எனும் வீர முழக்கத்துடன் வணங்குவோம்……
