
பாடுபட்டு பெற்ற சுதந்திரம்;
அதை அறிந்திராத இன்றைய சமுதாயம் ;
உரிமைக்குக் குரல் கொடுப்பவர் ,
கடமையை மறக்கலாகுமோ ?
வளர்ந்த மேலை
நாடுகளில் மூத்தோர்
எண்ணிக்கை
அதிகரிக்க , இந்தியத்
திருநாட்டில் இளைய
சமுதாய எண்ணிக்கை
அதிகமென புள்ளிவிவரம்
கூறுகையிலே அல்லல்பட்டு அடைந்த
சுதந்திரத்தை பேணிக்
காக்க வீறு கொண்டு
எழுந்து வா மகனே !
உலக அரங்கில் இந்தியாவை
இமயத்திற்கு உயர்த்த வா மகனே !
பயணிக்கும் பாதையிலே
தடைகளை உடைத்தெறிவாய் !
பாரத இளைய சமுதாயமே ,
திக்கெட்டிலும் நம் தாய்த் திருநாட்டின்
புகழ் பரவட்டும் ! உன் பங்களிப்பு
அதில் பரிபூரணமாய் இருக்கட்டும் !
பாரதத்தின் பெருமையை
நானிலம் போற்றட்டும் !
15/8/2023
