
(1)
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு!
நாமெல்லோரும்
சமமென உறுதியாச்சு!
அப்படியா?
(2)
நன்றாய் பணி செய்.
நலமாய் பொருள் தேடு.
ஊதியம் என்னிடம் கொடுத்திடு.
(3)
நல்ல மதிப்பெண்! பெருமையே!
இயற்பியல் வேண்டாம்;
மருத்துவமே படி!
(3)
அணிவகுப்புக்கு அனைவரும் தயார்
வெண்ணிற சீருடையில்
கரிமுத்து எங்கே; காணோம்!
(4)
அடுக்குமாடி குடியிருப்பு.
கொடியேற்றம் சிறப்பு
சேரியில் செவ்வண்ண கனல்.
(5)
காட்டு வேலை
முடிஞ்சுதா?
கூலி வாங்க;
புறக்கடையில் வா!
15_8-2023
