இன்னும் ஏன் என்னை வதைக்கிறாய்?/மீனாக்ஷி பாலகணேஷ்

பொழுது விடிந்து கொண்டிருக்கிறது
காலைக்கதிரவனின் சிவந்த
கிரணங்கள் அடிவானில் காண்கின்றன.
அதைப்படைத்தவனை
நோக்கி உள்ளம் குவிகிறது.

படுக்கையில் இருந்து
எழ முயலுகிறேன்;
இயலவில்லை; இடுப்பும் காலும்
எல்லாமாகச் சேர்ந்து
வலி உயிர் போகிறது;
நேற்றிரவு ஒரு வீம்பில்
மாத்திரை சாப்பிடாமல்
படுத்தது நினைவுக்கு வந்தது.

போதும் பட்டதும் பார்த்ததும்
அனுபவித்ததும் அடைந்ததும்
போதும் ரசித்ததும் சிரித்ததும்
அழுததும் அனைத்துமே
பறவைகளும் விலங்குகளும்
மாத்திரைகள் சாப்பிட்டா உயிர் வாழ்கின்றன?
வேளை வந்ததும் அனுப்பியவனிடம்
போய்ச்சேர வேண்டியது தானே முறை?