நன்னாள் இதுபோல் /மீனாட்சி சுந்தரமூர்த்தி

சின்னஞ்சிறு பிள்ளைக்கு
தன்னைக்
கொண்டாடும் பிறந்தநாள்
நன்னாள்.

கன்னியர்,காளையர்க்கு
புதுமணநாள்
போலொரு நாளேது?

கவிஞர்க்கு கவிதை
அச்சேறும்
நாளும், உரையாளருக்கு
மேடை
முகம் காட்டும் நாளும்
நன்னாள்.

கதிர் முற்றி களம் சேர்ந்தது வயலாடும்
உழவர்க்கான நாள்.

வணிகர்க்கு இலாபம்
பார்த்ததும்,
தொழிலாளர்க்கு வரும்படி
நாளும்
நல்ல நாளாம்.

இப்படி விதவிதமாய்
நாள்
வேறுபடலாம். நாடெலாம்
ஒன்றாகி,
இந்தியர் யாமென ஓங்கு
புகழேந்திக்
குதூகலிக்கும் நன்னாள்
விடுதலை நாள்.