இனிக்கும் தமிழ் -189/ டி வி ராதாகிருஷ்ணன்

நான்மணிக்கடிகை

எல்லாம் அறிந்தாரும் இல்லை.
ஏதும் அறியாதாரும் இல்லை
எல்லா நல்ல குணங்களும் உள்ளவரும் இல்லை
ஒரு நல்ல குணம் கூட இல்லாதவரும் இல்லை.

மனிதர்களுக்குள் அறிந்ததும், அறியாததும், நல்லதும், கெட்டதும் கொஞ்சம்
கூட குறைய இருக்கும்…மத்தபடி எல்லாரும் ஒண்ணுதான்

ஒருவ னறிவானும் எல்லாம் யாதொன்றும்
ஒருவ னறியா தவனும் ஒருவன்
குணன் அடங்கக் குற்றமு ளானும் ஒருவன்
கணன் அடங்கக் கற்றானும் இல்.

பொருள்-

எல்லாம் அறிந்தவர் இல்லை.ஒண்ணுமே தெரியாதவர் யாரும் இல்லை.
ஒரு நல்ல குணமும் இல்லாமல், குற்றமே நிறைந்தவன் யாரும் இல்லை.
ஒன்று விடாமல் எல்லாம் கற்றானும் இல்லை.

மனிதர்களுக்குள் உயர்வு தாழ்வு என்பது எல்லாம் ரொம்ப ஒண்ணும் பெரிசா இல்லை