
ஒவ்வொரு கடவுளுக்கும்
ஒருகதை உண்டு
தான் வணங்கிவரும் சாமியைப் பற்றியும்
அம்மா ஒரு குட்டிக்கதை சொன்னதாய் நினைவு
எதிர்பார்ப்புகள் பெரிதாக எதுவுமில்லாமல்
இயல்பாக காட்சித்தரும் இந்தசாமியும்
கடவுள் கணக்கில்தான் வருகிறது
உளிகொண்டு செதுக்கி
மறைந்திருக்கும் கடவுளை
வெளிக்கொண்டு வரவேண்டிய
அவசியம் எதுவுமில்லை
இரண்டுக்கு மேற்பட்ட கைகள்வைத்து
அவற்றில் ஆயுதங்களை
திணிக்கவேண்டிய தேவையுமில்லை
ஆடை ஆபரணங்கள் மீது ஆசையின்றி
ஒரு முழம் பூவையும்
மஞ்சள் குங்குமத்தையும் வைத்துக்கொண்டு
நடைசாத்தாமல் 24 மணிநேரமும்
அருள்பாளித்துக் கொண்டிருக்கிறது
வேப்பமரத்தின் அடியில் குடியிருக்கும்
செங்கல்சாமி
