
கவிதை வாசிக்கலாம்
அமர்வில். 18/8/23 அன்று
வாசித்த கவிதை.
ஒன்று திருட்டுக்கூட்டம்
சாமர்த்தியம் கூடியது
திருடவும் தெரியும்
தெத்தவும் தெரியும்.
இன்னொன்றுக்கு
அவ்வளவாய்த்திருடவராது
ஏதோ திருடும்
சாமர்த்தியம் பத்தாது.
மக்கள் கூட்டத்தை
ஆளுக்குப்பாதியாய்க்
கூறுபோட்டுக் கொண்டனர்
இருவருமே.
நீ பாதி நான்பாதி
சவடால் பேச்சுமோ
ஓயவேயில்லை.
உதிரிகள் எப்போதும்
அங்குமிங்கும் ஈஷிக்கொண்டு.
நான் அரசியல் பேசுவதில்லை
அது தப்பு என்கிறார்கள்
ஆசாரம் கூடியவர்கள்
ஆகத்தான் என் பேச்சு அப்படியும் இப்படியும்.
