
இன்று கவிதை வாசிக்கலாம் வாங்க நிகழ்ச்சியில் நான் படித்த இரு கவிதைகள்.
- முப்போகம்
சரியான தேர்வு
சில சமயம் தோற்கும்
தவறான முயற்சி
வெற்றியை ஈட்டித்தரும் . 1
சிலசமயம் நம்முடைய
சரியான முடிவுகள் நம்மை
அதல பாதாளத்துக்கு
தள்ளிவிடும் உணர்வாய் 2
சிலசமயம் நம்முடைய
பிழையான முடிவுகள் நம்மைச்
சரியான பாதையிலும்
நடக்க வைக்கும் நல்நெஞ்சே 3
வாழ்க்கை ஒரு
கண்கட்டி விளையாட்டு
பலருக்குச் சரியாக அமைவதில்லை
சிலருக்கு முப்போகம் விளைச்சல் . 4 - இயற்கை தந்ததை மறந்தேன்
இப்ப என்ன வேண்டும்
இயற்கை என்னிடம் கேட்டது
நானென்ன கொடுத்தா வைச்சிருக்கேன்?
எனக்கு வேண்டியதைக்
கேட்பதற்குப் புரியலை
அப்படியே வேண்டியதை
எடுத்துக் கொள்வதற்கு,
அமைதி காத்தேன்
எல்லாமே உனக்குத்தான்
எடுத்துக் கொள் பாதுகாத்து
அப்படியே என்னிடம் திருப்பிக்கொடு
இயற்கை சொன்னது.
எல்லாம் எடுத்துக் கொண்டேன்
திருப்பித்தர மறந்துவிட்டேன்.
#
18/08/2023

ஆஹா.அருமை. கடைசி வரி பஞ்ச்