டாக்டர் வள்ளுவர்/டாக்டர் முருகுசுந்தரம்

  1. புறத்துறுப்பெல்லாம் எவன் செய்யும்? யாக்கை
    அகத்துறுப்பு அன்பில் அவர்க்கு

உள்ளத்தில் அன்பு இல்லாதவர்களின் உடலுக்கும் உயிருக்கும்,
உடலுக்கு வெளியே உள்ள உறுப்புகளால் என்ன நன்மை என்ற
மதிநுட்பமான வினாவினால், உள்ளத்து அன்பின் அதி உன்னதப்
பயனை வலியுறுத்துகிறார் வள்ளுவத் தந்தை. அவர் புறத்துறுப்பு
என்று இங்கு குறிப்பிடுவது தோலும் அதைச் சார்ந்த உப
உறுப்புகளான முடியும் நகமும் தான்.
உள்ளத்தில் அன்பு பெருகப் பெருக ஆணவம் அழிந்து அமைதி
நிலவுகிறது. அமைதியான உள்ளம் அலை பாய்வதில்லை. மன
உளைச்சலுக்கு ஆளாவதில்லை. ஆரவாரமற்ற அமைதியான அன்பு
நிறைந்த உள்ளமே நலமான தோல் முடி நகமாக வெளிப்படுகிறது.
எனவே உள்ளத்தில் அன்பும் அமைதியும் அறவே இன்றி,
ஆணவமும், அழுக்காறும், ஆசைகளும் மிகுந்து மனமென்னும் அகம்
அழுக்காக இருக்கையில் புற உறுப்புகளான தோல், முடி,
நகங்களுக்கு நறுமணப்பூச்சுகளாலும், ஒப்பனைகளாலும் மாயத்
தோற்றம் தருவது என்ன பயன் தரும்? என்று அறிவுச் சவுக்கடி
வீசுகிறார் அறிஞர்க்கெல்லாம் அறிஞர் வள்ளுவர்.

உடல் உறுப்புகள் அனைத்தும், அவற்றைப் பாதுகாக்கும் புற
உறுப்பான தோல், முடி நகமும், நலமாக இருக்க அகத்துறுப்பாகிய
உள்ளத்தில் நிலவும் அன்பே அத்தியாவசமானது என்று
ஆணித்தரமாக வலியுறுத்துகிறார்.

WHAT IS THE USE OF PAINTING THE FACE…
WHEN YOUR MIND IS NOT IN PEACE…