அழகியசிங்கர்

என்பா 57
தெரு முழுவதும் தீபாவளி கோலம்
இலவசமாய்ப்
பட்டாசு வெடித்ததைக்
கேட்டேன்
என் வீட்டில்
பட்டாசு வாங்கவில்லை
என்ன அர்த்தம் இதற்கெல்லாம்.
என்பா 58
தீபாவளி மறுநாள்தான்
அம்மா இறந்தாள்
அன்றிலிருந்து தீபாவளி
தீபா ‘வலி ‘ யாய் மாறிற்று
ஆனால் அம்மா
எங்களைப் பார்க்க
இன்னும் வந்து
கொண்டிருக்கிறாள்
