நினைத்தது ஒன்று/அதிரன்



‌அம்மா… அம்மா
‌என்று வேலை செய்ய விடாமல்
‌தொந்தரவு செய்யும்
‌குழந்தையின் கையில்
‌ஒரு வெற்று வெள்ளைக் காகிதத்தையும்
‌அழிப்பான் பதித்த பென்சில் ஒன்றையும் தந்து விட்டு
‌வேலையில் மூழ்கிப் போனாள்.
‌பென்சிலை வருடிக்கொண்டிருந்த
‌குழந்தை
‌முதலில் ஒரு வட்டம் போட்டு
‌நிலவை நினைத்துக் கொண்டது
‌பின் அந்த நிலவை நிறுத்த
‌ஒரு மேடு ஒன்றை மலையென
‌நினைத்து வரைந்து வைத்தது
‌மலைக்குத்துணையாய்
‌மரம் ஒன்றை வரைந்துப்பார்த்தது..
‌மீண்டும் பென்சிலை மெல்ல வருடியது
‌ சட்டென்று இன்னொரு காட்சி நினைவுக்கு வரவே
‌ஒவ்வொன்றாக அழிக்கத் தொடங்கியது அழிப்பானால்.
‌இப்பொழுது அந்த வெற்று வெள்ளைக் காகிதம்
‌நிலவை
‌மலையை
‌மரத்தை
‌அழியாத்தடமாக
‌தன்னுள் கொண்டு
‌அடுத்த காட்சிக்கு தயாராகிறது

One Comment on “நினைத்தது ஒன்று/அதிரன்”

  1. சிறு பிராயம் முதலே மனம் எப்படி காட்சிகளை அமைத்துக் கொள்ள முயற்சிக்கிறது என்பதற்கு நல்ல விளக்கம்.

Comments are closed.