சசிகலா விஸ்வநாதன்/மதியம் வெயில் கொளுத்துகிறது

            (1)

பொங்கும் கடல் மஞ்சள் கதிரவன்;

தென்னை மரச்சோலை,
படகு பயணம்;

கடல் காற்றின் இன்பம் நுகரயேலாமல்;

மதியம் வெயில் கொளுத்துகிறது.

           (2)

பாறையைப் பந்தாடும்
நுரைக் கடல்;

அசைந்து செல்லும்
அழகில் சொக்குது

மனம்; ஆயினும் வியர்வை குளியல்;

மதியம் வெயில் கொளுத்துகிறது.

            (3)

கருமை வானம்
இடியுடன் மின்னல்

சரசர மழை
இரவு முழுவதும்

ஊழிக் கால மழை; இன்று

மதியம் வெயில் கொளுத்துகிறது.

            (4)

ஆடி அமாவாசை
அன்னை – ஐயன்

நினைவில்; அந்தணருக்கு அன்னம்; காகத்திற்கு

அன்னப் பிண்டம்; நிற்க இயலாமல்,

மதியம் வெயில் கொளுத்துகிறது.

               (5)

மூட்டுவலி மிகுந்திடும் என பதுங்கினேன்.

வீட்டினுள்ளே; அதிகாலை பனிக்குப் பயந்து,

மருத்துவர் சொல்படி
நடைபயிற்சி ஏலாது;

மதியம் வெயில் கொளுத்துகிறது.

19-8-2023