
1) பொத்தல்
கைகெகெட்டிய குடையின்
பொத்தல்களினூடே
கைக்கெட்டா வானம்
துண்டு துண்டாய் தெரிந்தது!
*
2) தருணம்
காற்று
நாம் விரும்பும் வேளையில்
விரும்பும் திசையில்
வீசுவதில்லை!
இரவில்
மொட்டை மாடியில்
அதிசயமாய் இன்று
ஜில்லென்று காற்று
வீசிக் களிக்கிறது!
குளிர்மையில்
நனையும் தருணத்தை
தவறவிட்ட மனம்
பகலின் வெம்மையில்
புழுங்கியது!
