
(1)
உங்கள் பொழுது வீணாகப் போகிறது.
நீங்கள் என்ன சொன்னாலும் பிள்ளைகள்
தங்கள் செவியில்
ஏற்றுவதே இல்லை;
தங்கள் முயற்சி வீண்தானே.
(2)
உங்கள் பொழுது
வீணாகப் போகிறது;
விடாத அடைமழையில்
நடைப்பயிற்சி ஏன்?
பிடிவாதமாக குடை யுடன் போகாமல் இரும்;
மலபார் மழை நானறிவேன்.
(3)
உங்கள் முயற்சி
வீணாகப் போகிறது;
தங்கத்தின் விலை
என்றும் ஏறுமுகமே!
பொன் வேண்டாம்
அவளுக்கு; பொன்றாத்
துணை நற் கல்வியே.
(4)
உங்கள் பொழுது வீணாகப் போகிறது
ஏன்; என்று சற்றே சிந்தியும்;
இணையதள சூழலிலும்,
முகநூல் அலையிலும்,
சிக்கிக் கொண்ட நூலனைய.
(5)
உங்கள் பொழுது வீணாகப் போகிறது;
பணி அயர்வு
அலுவலகப் பணிக்கு
மட்டும்; புதிதாய்
ஒன்றைக் கற்க;
அயர்வு என்பதே வராது.
20-1-2023
