அசோகமித்திரன் பக்கங்கள்/இரு சீன வைத்தியக் கதைகள்

சீனாவின் பாரம்பரிய வைத்தியம் உலகப் புகழ் பெற்றது.  நான் 

ஒருமுறை வைத்தியம் செய்து கொண்டேன். என் வரையில் அவ்வளவு வெற்றிகரமாக முடியவில்லை.
கதைகளில் முதல் கதை. நான் பள்ளிச் சிறுவனாக இருந்தபோது சாரணர் üகாம்ப்ஃபையரில்ý நிழல் நாடகமாக நடத்தப்பட்டது. அது இரண்டாம் உலக யுத்த காலம். நாங்கள் நேரடியாக யுத்த களத்துக்கு போவதாகக் கற்பனை செய்து கொள்ளுவோம். எங்கள் üகாம்ப்ý இரண்டு அல்லது மூன்று தினங்கள் நடக்கும் வெட்ட வெளியில். கூடாரங்கள் போட்டு நாளெல்லாம் ஓய்ச்சல் ஒழிவில்லாமல் உழைப்போம். பொழுது சாய்ந்ததும் üகாம்ப் ஃபையர்ý நடக்கும் ஆசிரியர்கள் உரை ஒரு மணி நேரம் இருக்கும். அதன் பிறகு சாரணர்கள் கலை நிகழ்ச்சி. ஒரு பாட்டு. ஒரு சிறு நாடகம் என மாறி மாறி ஒரு மணி நேரம் நடக்கும். அதன் பிறகு இரவு உணவு.
எங்கள் நிகழ்ச்சியில் மூன்று நடிகர்கள். சீன டாக்டர். சீன நர்ஸ். சீன நோயாளி. ஒருவன் ஒரு எலியை விழுங்கிவிடுகிறான். டாக்டர் முதலில் அவன் மண்டையில் ஒரு போடு போட்டு மயங்க வைக்கிறார். டாக்டருக்கும் நர்ஸ÷க்கும் சண்டை. நர்ஸ் முதலில் ஒரு ரம்பத்தை டாக்டரைப் பார்த்து எறிவாள். டாக்டர் அதை வைத்து நோயாளியின் வயிறை அறுத்து அதைத் திரும்ப நர்ஸ÷டம் எறிவார். அவள் ஒரு டவலை அவரிடம் எறிவாள். அவர் வெட்டின இடத்திலிருந்து ஓர் உளி மண்வெட்டி கடப்பாரை எனப் பல இரும்புப் பொருள்கள் எடுத்த பிறகு ஒரு எலியையும் எடுப்பார். நர்ஸ் கைதட்டிப் பாராட்டுவாள். அதன் பிறகு எடுத்த பொருள்களை நோயாளி வயிற்றில் திணிப்பார். நர்ஸ் ஒரு கோணி ஊசி எடுத்துத் தருவாள். படுத்துக் கிடக்கும் நோயாளி தலையில் மீண்டும் ஒரு போடு. அவன் விழித்து எழுந்து டாக்டருக்குப் பணம் கொடுத்து வெளியேறுவான். அன்று சீனா பிரிட்டிஷ் தரப்பு இந்த நாடகத்தைப் பார்த்தால் ஜப்பான் பக்கம் போய் விடக்கூடும். நல்ல வேறை எங்கள் பள்ளியில் சீன மாணவன் யாரும் கிடையாது.
நிழல் நாடகத்தில் முக பாவத்துக்கு இடம் கிடையாது. ஆனால் நிழல் நாடக வடிவத்தில் அற்புதம் செய்து பார்த்திருக்கிறேன். நடனக் கலைஞர் உதயசங்கர் புத்தர் பற்றி ஒரு முழு நீள நாடகம் சென்னையில்
நடத்தினார். நிழல் நாடகத்துக்கு இவ்வளவு சாத்தியங்கள் உண்டா என்று ஆச்சரியமாக இருந்தது.


அடுத்த முறை இரண்டாம் கதை.

ஒவ்வொருமுறையும் எழுத உட்கார்ந்தவுடன் என்ன எழுதுவது என்று என்னையே கேட்டுக்கொள்வேன்.  குழப்பமாகத்தான் இருக்கும். பலமுறை முழுத்தாள்கள எழுதி எழுதியதை ஒதுக்கி வைத்திருக்கிறேன்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நான் அடிக்கடி சந்திக்க நேர்ந்த ஒரு சாமியாருக்குப் புனைகதை மீது மிகுந்த ஆர்வம்.  நான் படிக்க வேண்டும் என்று அவரே நூலகங்களுக்குச் சென்று ஸ்டீஃபன் ஸ்வெய்க், காஃப்கா ஆகியோருடைய நூல்களை வாங்கி வந்து என்னைப் படிக்க வைத்தார்.  எழுத யோசனை ஏதாவது தோன்றியவுடனே அதைக் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பார்.  காலம் காலமாக எழுத்தாளர்கள் பல உத்திகள் கையாண்டிருக்கிறார்கள்.  அதில் குறிப்புகள் எழுதி வைப்பதும் ஒன்று.  நான் அன்றிலிருந்து கையில் கிடைத்த தாள்களிலெல்லாம் குறிப்புகள் எழுதி வைக்கத் தொடங்கினேன்.  ஆயிரம் குறிப்புகளுக்கு மேல் இருக்கும்.  எவ்வளவு பேருந்துச் சீட்டுகள் பின்னால் எழுதியிருப்பேன்.  பல குறிப்புகளும் தாள்களும் மக்கிக்கூடப் போய்விட்டன. இதில் யதார்த்தம் என்னவெனில்ஒன்றிரு முறைதான் குறிப்புகள் பயன்பட்டருக்கின்றன.  ஆனால் நான் குறிப்புகள் எழுதுவதை விடவில்லை.
குறிப்புகள் கட்டை நான் எங்கெல்லாமோ தூக்கிச் சென்றிருக்கிறேன்.  சொந்த ஊரில் முடியாவிட்டால் வேறிடத்தில் பயன்படுமோ என்ற எண்ணத்தில்தான்.  பயனில்லை.  ஸôமர்சட் மாம் இருமுறை அவர் எழுதப் போவதை நிறுத்துவதாக அறிவித்திருந்தார்.  அவருடைய üüரைட்டர்ஸ் ஹாண்ட்புக்ýý அப்படித்தான் உருவாகியிருக்கக் கூடும்.  


ஜøலை மாதப் பிறப்பு என்னைப் படபடக்க வைக்கும். எனக்கு மிகவும் ஆப்தமானவர்கள் தீபாவளி மலர்களுக்குக் கதை எழுதித் தரச் சொல்வார்கள். முதலில் முடியாது என்று சொல்லி விடுவேன். ஆனால் அவர்கள் இரண்டாம் முறை மூன்றாம் முறை கேட்கும்போது முயற்சி செய்கிறேன் என்று சொல்வேன். குறித்த தேதிக்கு ஒருநாள் முன்னதாகவே கொடுத்துவிடுவேன். என்னைச் சில பத்திரிகைகள் பயன்படுத்திக்கொள்வதையும் அறிவேன். காரணம். அவர்கள் எழுதும் பத்தி காட்டிக் கொடுத்து விடும். அவர்கள் போற்றும் நபர்கள் பட்டியலில் நான் இருக்க மாட்டேன். நா.பார்த்தசாரதியிடமிருந்து இரு விஷயங்கள் கற்றுக்கொண்டேன். அச்சுக்குக் கொடுக்கும் கையெழுத்துப் பிரதி தெளிவாக எழுதப் பட்டிருக்க வேண்டும். யாராவது படைப்பு வேண்டும் என்று கேட்டால் பத்து வரிகளாவது எழுதித் தந்து விட வேண்டும்.
உரைநடை வரி வரியாக எழுத வேண்டும். நாளெல்லாம் எழுதினாலும் இரு பக்கங்கள் தேறாது. இதை ஒருமுறை சொன்னதற்கு ஒருவர் பொது மேடையில் கோபித்துக் கொண்டார். அன்று அவர் கவிதைகள் எழுதி வந்தார். இப்போது அப்படிச் செய்யமாட்டார். அவருடைய கதைகள் நாவல்கள்தான் அவருக்குப் பேரும் புகழும் கொண்டு வந்திருக்கின்றன.
முன்பொரு முறை üநான் எப்படி எழுதினேன்ý என்பது போன்றொரு தலைப்பில் வரிசையாகக் கட்டுரைகள் வந்தன. எனக்குத் தெரிந்த üதீபம்ý பத்திரிகையும் üநானும் என் எழுத்தும்ý என்ற தலைப்பில் கட்டுரைகள் கேட்டு வாங்கி வெளியிட்டது. எனக்கு ஒன்று தெளிவாகியது. ஒவ்வொரு எழுத்தாளனும் அவனாகவே ஒரு பாதை வகுத்துக் கொள்ள வேண்டும். ஒருவருக்குப் பயன்பட்ட வழி அல்லது முறை இன்னொருவனுக்குப் பயன்படும் என்று உறுதி கூற முடியாது.
ஓரளவு எழுதப் பழகியவர்களுக்கு அவர்கள் எழுத வேண்டியதைக் கடைசி நேரம் வரை ஒத்திப் போடுவதுதான் வழக்கம். ஆரம்ப எழுத்தாளர்கள் ஊருக்கு முன் அவர்கள் எழுதியதைக் கொடுத்து விடுவார்கள். மாதப் பத்திரிகைகளில் கூடத் தொடர் கதை எழுதுபவர்கள் கடைசி நிமிடம் வரை கையெழுத்துப் பிரதியைத் தர மாட்டார்கள். அந்த அத்தியாத்துக்காக நான்கு பக்கங்கள் ஒதுக்கி வைத்திருந்தால் அத்தியாயம் மூன்று பக்கங்களில் அடங்கிவிடும். அல்லது அரைப் பக்கம் அதிகமாக இருக்கும். எனக்குத் தெரிந்து ஓர் எழுத்தாளர் ஒவ்வொரு தாளாக எழுதித் தருவார். எழுதியதை இன்னொரு முறை படித்துத் திருத்த மாட்டார். எனக்கு மிகவும் கவலையாக இருக்கும். ஆனால் அவருடைய தொடர்கதைகளில் பொருள் முரண்பாடு இருக்காது. ஆனால் படைப்பின் வடிவம் முதல்தரம் என்று கூறமுடியாது.
எழுதுவதற்கு அவசரம் அவசரமாகச் செய்யக் கூடாது என்றுதான்
அடிக்கடி நினைத்துக்கொள்வது. ஆனால் அதுவும் பிரசவ வைராக்கியம். மயான வைராக்கியம் போல அடுத்த முறை வரும்போது காணாமல் போய்விடும்.

(92வது நவீன விருட்சம் இதழ் – ஜனவரி 2013)


_