
நேற்று சென்றுவிட்டது
இன்று கிடைத்தது இப்போது வரை
நாளை உண்டா தெரியவில்லை.
சில ரகசியங்கள் வெளி தெரியாமல் இருக்கவே நிம்மதி
இறக்கும் தருணம் அறிய நேர்ந்தால் தினமும் இறப்பே.
நம்மை ஈன்றவர்களை
நாம் நிர்ணயிக்க வில்லை.
நம்மையும் அப்படியே.
கல்லை கடவுள் என்றும்,கடவுளை கல் என்றும் காட்டுகிறோம்.
நடை உடையில் புதுமை மெருகு,
மனத்தளவே குறுகிய பிசினாரி பட்டிக்காடு.
பலதும் கற்க மோகம்,
எதுவும் முடியாத யோகம்
வெற்று இடைவெளிகள்
பாயத்துடிக்கும் மனோவேகம்.

எதுவும் முடியாத யோகம் !
அருமை ! 👏👌🌺