்்்்்

எத்தனையோ கவிகள் பாடிய
இன்பநிலா….
காதலர்கள் கண்டுகிறங்கியத்
தங்கநிலா…
களங்கமுடன் தேய்ந்து..வளர்ந்த அந்த அழகு
நிலா…
ஒப்புமைக்கு பெண்முகத்தைப்
பெற்றநிலா…
பாலையிலும்…ஆழியிலும் காய்ந்தநிலா…
பரம்பரையாய்க் கதைகள் சொல்ல வந்தநிலா….
திரையிசையில் பலபாடல்களைக் கண்டநிலா…
திக்கற்றோர் துன்பத்தை தின்ற நிலா…
வானமதில் தொங்கின்ற வண்ணநிலா…
வாழ்க்கையெங்கும் நம்முடனே
வந்தநிலா….
இன்று வெறும் தரையாய் நாம் அதனை உணர்வதற்கு…
விருப்பமில்லை வெற்றியிலே
உண்மை காண்பதற்கு.
♦.
