சந்திராயன் 3/விஜயலக்ஷ்மி கண்ணன்

இன்று ஒருத் திருநாள்
வாழ்த்திப் பாடி கொண்டாட உள்ளம் விழைகிறது!

நிலவைத் தொட்ட நம் நாட்டின் பெருமைப் வரும் தலைமுறைக்கு
கலங்கரை விளக்கு.

நிலா நிலா ஓடி வா
அன்று பாடிய நாம்
நிலவே நிலவே
இதோ வந்தேன் நான் இன்று.

நிலவைக் காட்டி சோறு ஊட்டிய காலம் மாறி சந்திரயான் காட்டி
இன்னும் ஒரு உலகம் இதோ என்று விஞ்ஞான வளர்ச்சி
சிவப்பு கம்பளம் விரித்து மகிழவே!