
கவிச்சுடர் கா.ந. கல்யாணசுந்தரம் ஐயா தமிழில் அறிமுகம் செய்த தன்முனைக் கவிதைகளில் கிளை வடிவமாக #தன்முனையைபு_கவிதைகளை அறிமுகம் செய்கிறேன்.
‘தன்முனையைபு கவிதைகள்’
*தன்முனைக் கவிதை இலக்கணத்துடன்
இரண்டாம் மற்றும் நான்காம் வரிகளில் இறுதிச் சொல் இயைபுத் தொடை வருமாறு எழுத வேண்டும்.
தன்முனை +இயைபு+கவிதைகள்= தன்முனையைபு கவிதைகள் எனக் கொள்வோம்.
ஊக்கம் தந்த அன்பின் ஆசான் இளையபாரதி கந்தகப்பூக்கள் அவர்களுக்கு அன்பின் நன்றி
உதாரணக் கவிதைகள்
நிலவில் தடம்
பதித்தான் சந்திரயான்
உலகமே உற்று நோக்கும்
தன்னிகரில்லா மந்திரயான்
உறக்கம் துறந்து
உழைத்த விஞ்ஞானிகள்
நிலவில் சந்திரயானை
நிலைநிறுத்திய மெய்ஞானிகள்
வரவே மாட்டாய்
என்பது அவநம்பிக்கை
என்னுள்தானே உறைகிறாய்
என்பது தன்னம்பிக்கை
முன்னெடுப்பு செய்யும்
தோழனின் ஊக்கம்
முதிர்ச்சி அடைகிறது
அன்பின் ஆக்கம்

இலக்கணம் வேண்டாம் என விலகி வந்தாலும் அது தானே வந்து எப்படியோ ஒட்டிக்கொள்கிறது
அன்பின் உளமார்ந்த நன்றிங்க ஐயா 🙏