கல்யாண்ஜி கவிதை

இந்த ரயிலில் தான் என் பயணம்.
புறப்பட இன்னும் நேரம் இருக்கிறது.
எதிர் நடைமேடையில் நகரும் ரயிலைப்
பார்த்துக்கொண்டு நின்றேன்.
நகரும் சன்னலில் கண்ணீர் ததும்பும் ஒரு முகம்
நகராமல் நிற்கும் என்னுடைய ரயிலையே பார்க்கிறது.
நிற்க ஒன்று, நகர ஒன்றுக்கென
டிக்கெட் எடுத்திருக்கிறார்கள் ஒவ்வொருவரும்.