கல்யாண்ஜி கவிதை

சின்ன வயதில் இருந்து
ரயில் பார்ப்பதற்கு என்றே இந்த ஸ்டேஷனுக்கு வருவதுஏ
ஒரு பரவசமாக
ஒரு பழக்கமாக
ஒரு தவிப்பாக
ஒரு பைத்தியக்காரத்தனமாக
இருந்தது.
அப்போதெல்லாம் தெரியாது
இந்த ரயில் தான் ஊரைவிட்டு
என்னை ஏற்றிக்கொண்டு போய் நகரத்தில் தள்ளும் என்பது.
இந்த ரயில் தான் ஒவ்வொரு பண்டிகைக்கும் என்னை ஊரில் கொண்டுவந்து நிராதரவாக இறக்கிவிடும் என்பது.