
அழகிய சிங்கர் என்பா
(1)
பணம் இருந்தும்,
மேலும் பணம்
சேர்க்க அவதியும்
ஆவலாதியும் கொண்டு,
பரிதவிக்கும் மனிதரை காட்டிலும்,
மேல்;
பணம் இல்லாதவர் பாடு
(2)
குலதெய்வம் கும்பிட
குடும்பமாய் போனேன்.
பங்காளி முன்
பயந்தே நின்றேன்;
பங்குப்பணம்
கேட்க; என் செய்வேன்?
பணம் இல்லாதவர் பாடு
(3)
பெண் கல்வி
பெரும் செல்வம்
எனத் தெரிந்தும்
வெறுமனே நிற்கிறேன்;
என்னால்
பணம் செலவு இயலாதே!
பணம் இல்லாதவர் பாடு.
(4)
திருப்பதி சென்று
வர திருப்பம்
வரும் என்று
பல பேர் சொல்ல;
பல மணி காத்திருந்தேன்;
தர்மதரிசனம்!
பணம் இல்லாதவர் பாடு
(5)
இஞ்சி பூண்டு
தக்காளி விலை,
இந்நாளில் அதிகம் என்றே; இன்றும்
பழையதும்,பச்சை
மிளகாய் சட்னி!
பணம் இல்லாதவர் பாடு.

Very nice 👍