பணம் இல்லாதவர் பாடு/அழகியசிங்கர்

வகைமை : அழகியசிங்கர் என்பா

  1. புகழ் அதிகமாக சேர்த்து வைத்திருப்பவர்
    பணத்தைச் சேர்ப்பதில் கோட்டை விட்டிருப்பார்
    நேர்மையானவர் என்ற பெயர் எடுத்திருப்பார்
    பணம் இல்லாதவர் பாடு
  2. எங்கும் எல்லாம் பணம் பணம்
    உன் கையில் தாராளமாக இருந்தால்
    போதும். எங்கும் ஆட்சி செய்யலாம்
    பணம் இல்லாதவர் பாடு

3.
அமலாக்கத் துறையினர்
கோடிக் கணக்கில்
கணக்கில் வராத
பணத்தைத் தோண்டி
எடுக்கிறார்கள் அரசியல்வாதி வீடுகளில். தினமும்
பணம் இல்லாதவர் பாடு


  1. முதியோர் இல்லத்தில்
    அடைக்கலம் தேடுபவர்
    லட்சக் கணக்கில்
    பணத்தை நீட்டும்
    அவலம். புதிய விதி. எனினும்
    பணம் இல்லாதவர் பாடு

5.
.இல்லை இல்லை என்கிறான் ஏழை.
இருக்கிறது இருக்கிறது என்கிறான் பணக்காரன்.
வருகிறேன் வருகிறேன் என்கிறான் அமலாக்கக்காரன். பணம் இல்லாதவர் பாடு.