தன்னை அறிய இரு வழிகள் /பகவான் ரமணர்

தொகுத்தவர் : அழகியசிங்கர்

ஒரு தடவை டாக்டர் சையத் என்ற நண்பர் பகவானைக் கேட்டார். ‘சுவாமி ! பூரண சரணாகதியில் ஒருவன் மோட்ச இச்சையையும் கடவுளை அடைய வேண்டும் என்ற ஆசையையும் கூட விட்டொழிக்க வேண்டுமல்லவா?

பகவான் சொல்லுகிறார்: “உன்னுடைய இச்சை என்று ஒன்று இல்லை. எல்லாம் கடவுள் செயல் என்று உன்னைப் பூரணமாக அவரிடம் ஒப்படைத்து விட வேண்டும். உன் செயல் உன் இஷ்டம் என்று எதுவும் இல்லாத நிலையே சரணாகதி ஆகும்” என்று கூறினார்.

டாக்டர் சையத், ” சுவாமி சரணாகதி என்பது என்னவென்று இப்போது புரிந்து கொண்டேன். பூரண சரணாகதி நிலையைப் பெற நான் என்ன செய்ய வேண்டும்? அதற்கு ஏற்ற வழி யாது?” என்று கேட்டார்.

பகவான், ‘ சரணாகதி நிலையை அடைய இரண்டு மார்க்கங்களே இருக்கின்றன.

‘முதலாவதாக
‘ நான்’ என்ற அகந்தை எங்கிருந்து உண்டாகிறது, என்பதை ஆராய்ந்து அதன் மூலத்தை நாடி அதோடு ஒன்றித்துப் போக வேண்டும். மற்றொன்று. உன் இயலாமையை அறிந்து ‘என்னால் ஆவது ஒன்றும் இல்லை எல்லாம் கடவுள் இச்சை என்று உன்னை இறைவனிடம் ஒப்படைத்துவிட்டு அகந்தையற்று இருப்பதே ஆகும். இவ்வாறு. இவ்வாறு செய்வதால் உள்ள பொருள் இறைவன் ஒருவனே. மற்றபடி அகந்தை ஒழிய வேண்டுமென்பதே உணர்ந்து ஆத்ம சொரூபத்தில் நிலைத்து விடலாம். முழு சரணாகதி என்பது ஞானம் என்றும் மோட்சம் என்றும் கூறப்படுகிறது.

(ரமண விருந்து – பாகம் 3)

One Comment on “தன்னை அறிய இரு வழிகள் /பகவான் ரமணர்”

Comments are closed.