
வகைமை : அழகியசிங்கர் என்பா
1.
படுத்து உறங்கி எழப் பயமில்லை
பயணம் போகக் கால்கள் போதும்
பங்கு சொத்து பஞ்சாயத்து இல்லை
பணம் இல்லாதவர் பாடு
2.
பிறந்த போது பணம் இல்லை
வளர்ந்த போது பெற்றவன் பாடு
வாழும் வாழ்விலும் சுகம் இல்லை
பணம் இல்லாதவர் பாடு
3.
கவலை காலை வணக்கம் சொல்லும்
கடன்காரன் வசை மாரி பொழிய
கழியும் நாள் கவலைக்கு இடமே
பணம் இல்லாதவர் பாடு.
4.
நம்பிக்கை உண்டு நாளை வெல்ல
பிறப்பில் யாரும் குபேரன் பிறப்பல்ல
காலம் மாறும் காட்சியும் மாறும்
பணம் இல்லாதவர் பாடு.
5.
அம்மா சொல்வாள் அரசன் நானென்று
அப்பா சொல்வார் அறிவே வாழ்வென
அறிவு பெருகி ஆட்சி செய்யும்
பணம் இல்லாதவர் பாடு.
