இவர் தான் ரமணர்/சிவ.தீனநாதன்

ஒரு நாள் ஓர் அடியார் கூட்டம் பகவான் ரமணரை காண வந்தது. ரமணர் எங்கே இருக்கிறார் என்று கேட்டவர்களுக்கு ஒரு ரமணத் தொண்டர் ‘பகவான் சமையல் கட்டிற்குச் சென்றிருப்பதாகக் கூறினார். அந்தப் புதிய யாத்ரீகர் கூட்டம் சமையற்கட்டிற்கு விரைந்தது.

அங்கே பகவான் என்ன செய்து கொண்டிருந்தார்? மற்ற தொண்டர்களுடன் தாமும் ஒருவராக கோவணாண்டியான பகவான் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தார். அடுப்பின் மீதிருந்த ஒரு பெரிய அண்டாவின் நெருப்பை தூண்டிவிட்டுக் கொண்டிருந்தார் .

வந்த அந்த புதியவர்கள் ஒருவர் பகவானே கேட்டார், ‘ ராமணர் எங்கே?’

ரமணர் நிமிர்ந்து பார்த்து, வந்தவர்களிடம் அந்த பெரிய அண்டாவை காட்டி, ‘ இவர்தான் ரமணர்’ என்றார்.

வந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. சமையற்கட்டில் இருந்த ரமண அடியார்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. ஆகையால் பகவான் விளக்கம் தந்தார்.

அந்த அண்டாவின் மீது ரமணன் என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன.

பகவான் கூறினார், ‘இந்த அண்டாவின் மீது ‘ரமணர்’ என்று எழுதியிருக்கிறது. பகவான் தன் உடலைத் தொட்டுக் காட்டி, இதில் அப்படி பேர் பட்டிருக்கின்றன?’ என்றார்.

பகவானுக்கு எதிலும் வேதாந்தம். எல்லாமே வேதாளம்.

( நன்றி : ரமண விருந்து பாகம் 3)