பாற்கடல். 2.0/சப்தரிஷி லா.ச.ரா


வி ரு ட் ஷ ம்

முப்பத்து ஆண்டுகளுக்கு மேலாக விருட்ஷம் இதழினை விடாப்பிடியாக வைராக்யத்துடன் நடத்தி வரும் அழகியசிங்கர் சிந்தாநதியை பிரசுரிக்க விரும்புவதாக கூறினார். அவர்கேட்டுக்கொண்டபடி இதற்கு அணிந்துரை எழுதியிருக்கிறேன் தேன் குடிக்க கசக்குமா என்ன?
அட்டைப்படத்தின் லாசரா அதிலிருந்து நம்மைப்பார்க்கும்போது
அதிலிருந்து இறங்கி வந்துவிடுவாரோ என்ப தைப்போல வடிவமைத் திருக்கிறார்..
புத்தகத்தை அனுப்பி வைத்து விட்டு சொன்னார் இந்தப்புத்தகத்தை விருட்சத்தில் பிரசுரித்தது எனக்கு ஆத்ம திருப்தி என்று சொன்னது…. எனக்கு ஆத்ம திருப்தி..


அதிலிருந்து சிலபகுதிகள்

   தினமணி ஆசிரியர்

லாசராவை கதிரில் வாராவாரம் ஏதாவது எழுத முடியுமா எனக்கேட்க… எதைப்பற்றி என்று லாசரா கேட்க வானத்தின் கீழ் எதைப்பற்றி வேணுமானா லும் என்று ஆசிரியர் சொல்ல……
அரைமனதோடு லாசரா ஒப்புக்கொள்ள….
ஆசிரியர் உடனே கேட்டார்
” விளம்பரம் கொடுத்தர்
லாமா?
அரைமனதோடு ஏன் ஒத்துக்கொண்டார் என்பது லாசராவின் அடுத்தவரி ்களில் புரிந்தது
நான் ஒருசிறுகதைக்கே
நாலைஞ்சுமாசம்எடுத்துக் கறவன்…..நான்எழுத்துக் களை சுண்டக்காய்ச்சி சுண்டக்காய்ச்சி எழுதற வன் நீங்க படிக்கற நான் எழுதின ஒருபக்கம்ங்கறது
நான் ஆறுபக்கங்களை சுண்டக்காய்ச்சின சத்து தான்.என்னால வாரா வாரம் தடுக்காம எழுதித் தரமுடியுமான்னுதெரியல .நான் பத்து சாப்ட்டர் எழுதிஅனுப்பினப்பறம் விளம்பரம் தரலாம்.
இருமாதங்கள் கழித்து
முதல் அத்யாயமான ‘அம்மா’ வை கதிருக்கு எடுத்துப்போய் கொடுத்த பாக்யவானான எனக்கு அப்போது தெரியாது இது சாஹித்ய அகாதமி விருது வாங்குமென்று…
இந்தப்புத்தகம் நெடுக… சாமி அறை சிறுகதவில் இருக்கும் குட்டிக்குட்டி மணிகள் எழுப்பும் இனிமை ஒலிகள் போல
மனம் இனிக்கிறது.
மூன்றாவது அத்தியாயம்
“ஒரே அம்மா” அதிலிருந்து
ஒருமுக்யமான வரி வாச கர்கள் மனதில் அழியாச் சுடராய் மிளிர்கிறது
” அம்மா என்றால்ஒரே
அம்மாதான் உன் அம்மா
என் அம்மா என்று
தனித்தனி அம்மாக்கள்
கிடையாது”
¶¶¶¶¶¶¶¶¶
திருவண்ணாமலையில்
ஒருசாமியாரைசந்தித் தேன்.”..ஐயாநான் பூர்வாசிரம லாசராவின் வாசகன் எல்லாத்தையும் துறந்த என்னால லாசரா வின் எழுத்தைத்துறக்க முடியலை…அவரோட புத்தகம் நாலைஞ்சு இந்த மூட்டையில இருக்குது”
¶¶¶¶¶¶¶
¶ டில்லியில் சாஹித்ய அகாதமி விழாவில் லாசரா
சொன்னது ” சிந்தாநதி பற்றிக்குறிப்பிடுபவர்கள்
” ஸிந்தாநதி ( SINDHA NADHI) என்று உச்சரிக்கி றார்கள்.சிந்தாத நதி உண்டா? அது ச்சிந்தாநதி
(CHINTHA NATHI) சிந்தனை நதி… நதி நிற்காமல் ஓடிக்கொண்டி ருப்பதைப்போல சிந்தனை யும் ஓடிக்கொண்டே இருக் கும் என்பதால் சிந்தாநதி.

சிந்தாநதியில் சில “மயக்ஸ்”
¶ தேடல் என்றால் அகராதியில் அல்ல…உன் விதியில் தேடு
¶ த்ரேதா,க்ருதா,துவாபர,
கலி காலம் ஒரு முப்பெட்டகம் என்றால்
யுகங்கள் அதன்முகங்கள்
் ¶சிந்தனையும் அதன்
வெளியீடு பாஷையும் கூடிய பின்…. கேள்வி….. இன்றியிமையாத விளைவு !
¶ என் சொல்லின்
உருவேற்றம்தான் என் சக்தி.
¶ மனமே கெஞ்சுகிறேன்
ஒருகணம் துஞ்சாயோ.

  ¶ ஒவ்வொரு அத்யாய இறுதியிலும் நதி சம்பந்தப் பட்ட...வரியில் முடித்திருப் பார்..நானும் அவர் வரி யிலேயே முடிக்கிறேன்
" சிந்தாநதியில் குமிழ்கள் தோன்றுகின் றன.சேர்கின்றன.பிரிகின்றன மூழ்குகின்றன. மறைகின்றன.சிந்தாநதியில் ஒருயாத்திரை..
   இனி நாமும் நதியில்

பயணிப்போமா?

3 Comments on “பாற்கடல். 2.0/சப்தரிஷி லா.ச.ரா”

Comments are closed.