ஹரணி/கவிதைக் குறித்து கேள்வி -பதில்

  1. கவிதை எழுத உகந்த நேரம் என்ன?
    எல்லா நேரத்திலும் எழுதுகிறேன்.
    2.கவிதை தானாக எழுத வருமா அல்லது செயற்கையாக யோசிக்க வேண்டுமா?
    தானாக வரும்.
    3.கவிதை எழுதத் தலைப்பு கொடுத்தால்தான் எழுதுவார்கள்? ஏதோ ஒரு படத்தை அல்லது உருவத்தைப் பார்த்தால் தான் கவிதை வருமா?

இரண்டும்.
ஏதேனும் ஒரு காட்சி நிகழும் சம்பவங்கள் இவற்றால் கவிதை வரும்.
4.உங்கள் கவிதை சரியாக இருக்கிறதா என்பதை அறிய என்ன முயற்சி செய்வீர்கள்?
என் மனமே முடிவு.
வெளியாகிக் கருத்துரைத்தால் கேட்டுக் கொள்வேன்.
5.உங்கள் கவிதை மூலமாக சமுதாயக் கோபத்தைக் காட்ட விரும்புகிறீர்களா?
நிச்சயமாக.