அன்புச்செல்வி சுப்புராஜ்/கவிதைக் குறித்து கேள்வி – பதில்

  1. கவிதை எழுத உகந்த நேரம் என்ன?
    நேரம், காலம் எதுவும் கிடையாது. தோன்றும் பொழுது எழுதுவேன் 2.கவிதை தானாக எழுத வருமா அல்லது செயற்கையாக நீங்கள் யோசிக்க வேண்டுமா?
    இதுவரை செயற்கையாக யோசித்தது இல்லை. காணும் காட்சிகள், நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்து, உணர்தலில் தோன்றும் எண்ணங்களும், உணர்வுகளும் கவிதையாக வெளிப்படுகின்றன
  2. கவிதை எழுத. தலைப்பு கொடுத்தால் தான் கவிதையை எழுதுவீர்களா. ஏதோ ஒரு படத்தை அல்லது உருவத்தை பார்த்தால் தான் கவிதை வருமா. ?

சமயங்களில் நமக்குப் பிடித்த தலைப்பு, பார்த்ததும் ஈர்க்கும் படங்களைப் பார்த்தால் கவிதை எழுதத் தோன்றும். ஆனால் இதுவே வழமையல்ல… எனக்காக தோன்றும் பொழுதுதான் எழுதுவேன்.

  1. உங்கள் கவிதை சரியாக இருக்கிறதா என்பதை அறிய என்ன முயற்சி செய்வீர்கள்?

எழுதியதும் வாசித்துப் பார்ப்பேன். நிறைவாக இருந்தால் பதிவிடுவேன்.

  1. உங்கள் கவிதை மூலமாக சமுதாயக் கோபத்தை காட்ட மவிரும்புகிறீர்களா.?

கோபம் மட்டுமல்ல… சமுதாயத்தின் மீதான ஆதங்கம், மகிழ்ச்சி, வேண்டுகோள், ஏக்கம் விருப்பம், கோபம் என அனைத்து விதமான உணர்வுகளையும் வெளிக்காட்டும் வகையில் கவிதைகள் எழுதி வருகிறேன்.

One Comment on “அன்புச்செல்வி சுப்புராஜ்/கவிதைக் குறித்து கேள்வி – பதில்”

Comments are closed.