
வணக்கம்
- கவிதை எழுத உகந்த நேரம் என்ன ?
இரவு. சில சமயம் உறக்கத்தில் வார்த்தைகள் கோர்த்துக் கொண்டோ, அன்றி சிதற லாகவோ வரும்.
- கவிதை தானாக எழுத வருமா அல்லது செயற்கையாக நீங்கள் யோசிக்க வேண்டுமா ?
தானாக உருக்கொண்டாலோழிய செயற்கையாக வருவது கடினம்.
- கவிதை எழுத, தலைப்பு கொடுத்தால் தான் கவிதையை எழுதுவீர்களா, ஏதோ ஒரு படத்தை அல்லது உருவத்தை பார்த்தால் தான் கவிதை வருமா.?
பயணங்களின் போது, மனம் வருத்தம், சந்தோஷம் கொள்ளும் போது, சில ஓவியங்களை காணும் போது. வலிய உருவாவதில்லை கவிதை, மொட்டவிழு ம் மலர் போல் தானாக உரு கொள்ளும்.
- உங்கள் கவிதை சரியாக இருக்கிறதா என்பதை அறிய என்ன முயற்சி செய்வீர்கள்.?
முயற்சி என்று ஏதுமில்லை. தோன்றுவதை எழுத்தில் வடிப்பதுண்டு . நட்புடன் சில சமயம் பகிர்ந்துக் கொள்வேன். பிழை திருத்தம் இருந்தால் சரி செய்துக் கொள்ள.
- உங்கள் கவிதை மூலமாக சமுதாயக் கோபத்தை காட்ட விரும்புகிறீர்களா.?
கோபம் என்பதை விட ஆதங்கத்தை வெளிப்படுத்திக் கொள்வதுண்டு.
