அழகியசிங்கர்/கவிதைக் குறித்து கேள்வி – பதில்

  1. கவிதை எழுத உகந்த நேரம் எது?

எப்போதும் கவிதைதான் மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலும் எழுத முயற்சிப்பதில்லை.

  1. கவிதை தானாக எழுத வருமா அல்லது செயற்கையாக நீங்கள் யோசிக்க வேண்டுமா?

தானாகவும் வரும். கவிதை எழுத எழுத வேண்டும் என்று முயற்சியும் செய்தாலும்
கவிதை எழுத வரும்.

  1. கவிதை எழுத தலைப்பு கொடுத்தால்தான் கவிதையை எழுதுவீர்களா? ஏதோ ஒரு படத்தை அல்லது உருவத்தைப் பார்த்தால்தான் கவிதை வருமா?

கவிதை எழுத முயன்றால் எல்லா முயற்சிகளையும் செய்து பார்க்கிறேன்.

  1. உங்கள் கவிதை சரியாக இருக்கிறதா என்பதை அறிய என்ன முயற்சி செய்வீர்கள்?

நான் எழுதுவது பெரும்பாலும் சரியாய் இருக்கும். இன்னும் கேட்டால் மற்றவர் எழுதுவது சரியாய் இருக்கிறதா இல்லையா
என்பதைக் கண்டு பிடிக்க முடியும்.

  1. உங்கள் கவிதை மூலமாக சமுதாயக் கோபத்தைக் காட்ட விரும்புகிறீர்களா?

என்னுடைய இருப்பே இந்தச் சமுதாயத்தில்தான். அதனால் என்னைப் பகடி செய்வது மூலம் சமுதாயத்தைச் சாட விரும்புகிறேன்.