புவனா சந்திரசேகரன்/கவிதைக் குறித்து கேள்வி-பதில்

  1. கவிதை எழுத உகந்த நேரம் என்ன?

அப்படி எதுவும் குறிப்பிட்ட நேரம் என்று வைத்துக் கொண்டதில்லை. மனதில் ஏதாவது வரிகள் ஓடினால், உடனே அவற்றை எழுதி வைத்துக் கொள்ளத் தோன்றும்.

2.கவிதை தானாக எழுத வருமா அல்லது செயற்கையாக நீங்கள் யோசிக்க வேண்டுமா?

சில சமயங்களில் தானாகவே மனதில் ஊறும். செயற்கையாக எழுதுவது மனதிற்கு நிறைவளிக்காது.

  1. கவிதை எழுத. தலைப்பு கொடுத்தால் தான் கவிதையை எழுதுவீர்களா. ஏதோ ஒரு படத்தை அல்லது உருவத்தை பார்த்தால் தான் கவிதை வருமா. ?

தலைப்பு அல்லது படத்தைப் பார்த்து எழுதுவது சில சமயங்களில் சரியாக வரும். எல்லா சந்தர்ப்பங்களிலும் கண்டிப்பாக எழுதமுடியும் என்று தோன்றுவதில்லை.

  1. உங்கள் கவிதை சரியாக இருக்கிறதா என்பதை அறிய என்ன முயற்சி செய்வீர்கள்?

மீண்டும் மீண்டும் வாசித்துப் பார்ப்பேன். வாய்விட்டுப் படிக்கும் போது எங்காவது தட்டினால் மாற்ற முயற்சி செய்வேன்.

  1. உங்கள் கவிதை மூலமாக சமுதாயக் கோபத்தை காட்ட விரும்புகிறீர்களா.?

கோபம் என்பதை விட ஆதங்கம், ஏமாற்றம், விரக்தி போன்ற அனைத்து உணர்வுகளையும் கவிதையில் காட்டுவதுண்டு. முக்கியமாக சோகமாக இருக்கும் போது அல்லது தோல்வியைச் சந்திக்கும் போது கவிதைகள் எழுதி மனதை சமாதானம் செய்து கொள்கிறேன்.