ஒரு விந்தை நிகழ்ச்சி/சிவ. தீனநாதன்

வணக்கம்.

(ஸ்ரீ ரமண விருந்து பாகம் 3 லிருந்து)

1939 ஆம் வருடம் ஒரு நாள் மாலையில். தரிசன ஹாலில் பகவான் அடியார்களிடம் இவ்வாறு கூறினார்.

‘சில ஆண்டுகளுக்கு முன் பாரிச வாயுவினால். பீடிக்கப்பட்ட ஒருவர் ஆசிரமத்திற்குக் கொண்டுவரப்பட்டார்.

‘அவர் சிலரது உதவியுடன் ஹாலுக்குள் தூக்கிவரப்பட்டு என் முன் வைக்கப்பட்டார். வழக்கம்போல நான் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சுமார் அரை மணி நேரத்திற்குப் பிறகு அந்த மனிதர் சற்று சிரமப்பட்டு தானாகவே எழுந்து வந்து என்னை நமஸ்கரித்து , என்னிடம் ஒரு நோட்டுப் புத்தகத்தைத் தந்தார்.

அந்த நோட்டுப் புத்தகம் அவருடைய ஜாதகமாக இருந்தது. குறிப்புப்படி அவர் பாரிச வாயிவினால் பீடிக்கப்படுவாரென்றும், சரியாக இந்த சமயத்தில். சரியாக இந்த சமயத்தில் ஒரு மகாத்மாவின். மகாத்மாவின் தரிசனம் ஆகுமென்றும் , அவர ருளால் அவர் அற்புதமாகக் குணமடைவார் என்றும் கண்டிருந்தது.

அந்த மனிதர் தன் மட்டற்ற நன்றியறிதலைத் தெரிவித்த பின், தானாகவே நடந்து ஹாலை விட்டு வெளியேறிப் போய்விட்டார்.

அங்கிருந்த அனைவரும் ஆச்சரியத்தால் ஸ்தம்பித்துப் போயினர்.

எனக்கே ஆச்சரியம் தான். ஏனெனில் நான் அவருக்காக மனமறிந்து ஒன்றுமே செய்யவில்லை என்றார் பகவான்.

இவ் அற்புத நிகழ்ச்சியை விளக்கி பகவான் கூறினார், ‘ஞானிக்கு சங்கல்பம் ஏதுமில்லை.’

எனவே பகவானது சங்கல்பமின்றியே அவரது அருள் விலாசம் நோயாளியை குணப்படுத்திவிட்டது.

One Comment on “ஒரு விந்தை நிகழ்ச்சி/சிவ. தீனநாதன்”

Comments are closed.