இப்பொழுது என் முறை/அதிரன்

இன்றைய நிகழ்ச்சியில்
நான் வாசித்த என் கவிதை

பூங்காவில்
எனக்கு முன்னால்
மூன்று பேர் ஒருவர் பின்ஒருவராக
நடை பயிற்ச்சி செய்கிறார்கள்
மெல்லிய காற்றசைவில்
பூவொன்று உதிர்கிறது
முதலாமவர் தலை மேல்
புழுவோ பூச்சியோ என்றவர்
வேகமாக தட்டி விடுகிறார்
தரையில் மோதி கவிழ்ந்த பூ
இப்பொழுது இரண்டாம் நபரின்
பூட்ஸ காலில் மிதி வாங்கி
பாதி நசுங்கி பாதி உயிரில்
பள்ளி கொண்டது நடைபாதையில்
மூன்றாமவர் பூட்ஸ் காலால் அதை
உதைத்து நடை பாதை விட்டு
புல்வெளிக்க்கு அப்புறபடுத்துகிறார்
இப்பொழுது என் முறை
செய்வதாறியாது நிற்கிறேன்.
மெல்ல என் மனம் பிராத்திக்க தொடங்கியது
“இன்னொரு பூவிற்க்கு இந்நிலை வேண்டாம்மென்று “
மெதுவாக கண்களை திறக்கின்றேன்
இப்பொழுது
உதிர்கிறது
இன்னொரு பூவொன்று
என் தலைமேல்…..

2 Comments on “இப்பொழுது என் முறை/அதிரன்”

Comments are closed.