கவிஞர் மஹ்மூத் தார்விஷ் கவிதை

இன்றைய நிகழ்வில் நான் வாசித்த தர்வேஷின் கவிதை ஒன்று

எனது நண்பனைப் பற்றி
எமது மண்ணிலே அதிகம் பேசினர்
எப்படி அவன் சென்றான்?
எப்படி அவன் திரும்பவே இல்லை?
எப்படி அவன் தன் இளமையை இழந்தான்?
துப்பாக்கி வேட்டுக்கள்
அவன் மார்பையும் முகத்தையும் நொருக்கி
தயதுசெய்து மேலும் விபரணம் வேண்டாம்
நான் அவனது காயங்களைப் பார்த்தேன்?
அதன் பரிணாமங்களைப் பார்த்தேன்
நான் நமது குழந்தைகள் பற்றி எண்ணுகிறேன்
குழந்தையை இடுப்பில் ஏந்திய ஒவ்வொரு தாயையும் பற்றி எண்ணுகிறேன்
அன்புள்ள நண்பனே அவன் எப்போது வருவான் என்று கேட்காதே
மக்கள் எப்போது கிளந்தெழுவார்கள் என்று மட்டும் கேள்”