மாற்று ஆள் /எஸ்ஸார்சி

1/9/23 மெய்நிகர்
கவிதை அமர்வில்
வாசித்த கவிதை

காம்பவுண்டு சுவர் எழுப்ப
பீகார்க்காரன்
வெள்ளை அடிக்க அஸ்ஸாமி
ஜல்லிபோட
ஜார்கண்ட் காரன்
சலூன்கடைக்குப்போனால்
சப்பைமூக்கு நேபாளி
சாப்பிட ஓட்டலுக்குப்போனால்
கல்தோசைபோடவும்
கல்லா அமரவும்
ஒரியாக்காரன்
எக்மோர் ஸ்டேஷனில்
ஸ்பானர் கொரடாவோடு
வங்காளி
மெட்ரோவுக்கு குழிவெட்ட
சிவப்பு பட்டையோடு
உபிகாரன்
ரயில்வே சிப்பந்தியில்
தமிழ் பேசுபவன்
தடைசெய்யப்பட்டு
ஆண்டுகள் எத்தனையோ
வங்கியில் இங்கொன்றும்
அங்கொன்றுமாய் தமிழ்
தெரிந்த கிளார்க்குகள்
நண்பனைக்கேட்டேன்
நம்ப ஆட்களை
எங்கேயும் காணோமே
ஏனப்பா?
விடை சொன்னான் நண்பன்
துபாயில் சிங்கப்பூரில்
கனடாவில் யூகேயில் ஈரோப் ஆஸ்திரேலியா
அமெரிக்காவில் என
குப்பை கொட்டுகிறான்
தமிழன் என்றார்.
சுமங்கலிப்பெண்டுக்கும்
பிராமணார்த்தத்திற்கும்
கோவில் பூசைக்கும்
மட்டுமே
அதே அய்யர்கள்
அதே மாமிகள்
மாத்தாளே வரக்காணும் இன்னும்.

One Comment on “மாற்று ஆள் /எஸ்ஸார்சி”

Comments are closed.