குடும்பக் கட்டுப்பாடு/சிவ தீனநாதன்

ஒரு அரசியல்வாதி.; சமூகத் தொண்டரும் ஆவார் ; சற்று அதிகப்பிரசங்கி.

இவர் ஒருநாள் பvகவான் சந்நிதானத்திற்கு வந்தார்; பகவானைக் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்.

‘ சுவாமி குடும்பக்கட்டுப்பாடு பற்றி தங்கள் கருத்தெ ன்ன? அது அறிய விரும்புகிறேன்.

பகவான் வழக்கம்போல் மௌனமாக உட்கார்ந்தி ருந்தார்.

பகாவனிடமிருந்து பதில் ஏதும் இல்லாததால் அந்த சமூகத் தொண்டர் குடும்பக் கட்டுப்பாட்டின் அவசியம் பற்றி நீண்டதொரு பிரசங்கமே செய்த ஆரம்பித்தார்.

ஹாலில் உள்ள அன்பர்கள் அனைவரும் வாய் பேசாது, இவரது அதிகப் பிரசங்கித்தனத்திற்கு இறக்கப்பட்டவர்களாக அமர்ந்திருந்தனர்.

பகவானும் சிலை போல உட்கார்ந்திருந்தார். அந்த அதிக பிரசங்கி, பிரசங்கத்தை ஒருவாறு முடித்து, ஓய்ந்துபோய் உட்கார்ந்தார்.

ஹாலில் அப்போது பூரண அமைதி நிலவியது. இந்த அமைதியைக் கிழித்துக்கொண்டு பகவானது சாந்தமான – ஆனால் அழுத்தமான குரல் கேட்டது!

“பர்த் கண்ட்ரோல் இருக்கட்டும், மரணத்தை வெல்வது எப்படியென்று நீர் அருவீரா?”

பதில் இல்லை ! என்ன பதில் கூறுவார், அந்த சமூகத் தொண்டர்?

ஹாலில் மீண்டும் அமைதி நிலவியது.

விதண்டாவாதங்களுக்குப் பகவான் பதில் அளித்ததில்லை.

மௌனமே அவரது பாஷை.

(ரமண விருந்து பாகம் 3 என்ற புத்தகத்திலிருந்து)