வார்த்தை

புஷ்பால ஜெயக்குமார்

அது ஒரு கண்டுபிடிப்பு

அவன் முகம் அதற்குப் பொறுப்பேற்கிறது

அது முழுமையடையாத காரணத்தால் 

என்றும் மனிதர்கள்

பேசிக் கொண்டிருக்கிறார்கள்

கத்தி சண்டையில் 

வரும் சத்தம் பேசும்போது

அவன் அதைக் கேட்பதைவிட

அது அவனை இயக்குகிறது

சொல்லின் பொருள்

ஆதியிலிருந்ததோடு

முடிந்து விட்டது

ஒரே ஒரு முறை

சொல்லும் போது

அத்தனை ஆண்டுக்கால 

நட்பும் முறிந்து விட்டது

உறுதி செய்யப்பட்டது

பலிக்கும் என்றால்

அது உன் அதிர்ஷ்டம்